» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்: யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது

புதன் 29, ஜனவரி 2025 5:37:56 PM (IST)

சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கார்த்திக் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றவிட்டதாக இணையத்தில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து, அதன் மூலம் பணம் பறிக்க முயற்சித்த யூடியூபர் திவ்யா கள்ளச்சி மீது சில நாட்களுக்கு முன்பு சித்ரா என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அண்மையில் திவ்யா கள்ளச்சிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்த சித்ராவையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். கார்த்தியின் நண்பரான சித்ரா அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி திவ்யா கள்ளச்சி, ஆனந்த் என்பவரின் உதவியுடன் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை காட்டி திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory