» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களுக்கு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் மீது நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்!!
புதன் 29, ஜனவரி 2025 5:23:21 PM (IST)
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/anbumaniramados_1738151580.jpg)
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மகிழுந்தில் தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, தி.மு.க. கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/seemansk4_1739790558.jpg)
நிதி தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:38:43 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tvlmakkal43i_1739790282.jpg)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/protest4i34i_1739786507.jpg)
பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/duraimuruganwhit_1537266670_1739776557.jpg)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி
திங்கள் 17, பிப்ரவரி 2025 12:46:21 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tneb_1_1739775598.jpg)
வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!
திங்கள் 17, பிப்ரவரி 2025 12:30:36 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/edapadi43i43i_1739771396.jpg)
தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கைதான்: அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:19:13 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/dogattack_1739771561.jpg)