» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடுதாழையில் ரூ.15 கோடியில் மீன் பிடி இறங்குதளம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்
புதன் 29, ஜனவரி 2025 4:19:57 PM (IST)
![](http://media.tutyonline.net/assets/2025_Part_01/cmstti4i.jpg)
கூடுதாழை கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கூடுதாழை கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்கள்.அதனை தொடர்ந்து கூடுதாழையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு பங்கேற்று பணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர் நலனிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மீனவப் பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கும், மீன் இறங்குதளம் அமைப்பதற்கும் மீனவ மக்களின் கோரிக்கைகளை ஏற்று திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு படிப்படியாக அமைக்கப்பட்டு வருகிறது அதன்படி கூடுதாழை மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று ரூ.15 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் நலனுக்காக மீனவர்களை அழைத்து மீனவர்களிடம் கருத்துகளை கேட்டு அவர்களின் தேவைகேற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து நீண்டகாலமாக பட்டா இல்லாமல் இருந்த நமது மீனவ கிராம மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர்களுக்கு பட்டா வழங்கினார்கள்.
பிப்ரவரி மாதம் 7 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தந்து மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் விடுபட்ட திருநெல்வேலி மாவட்ட மீனவ மக்களுக்கு பட்டா வழங்கவுள்ளார்கள். வீடுகள் இல்லாத மீனவ மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முன்னாள் முதலமைச்சர்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்; 2006 முதல் 2011 வரையிலான ஆட்சி காலத்தில்; மீனவர்களின் நாட்டு படகுகளுக்கு மாதம் 300 லிட்டர் மண்ணெண்னை மானிய விலையில் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மீனவர்களின் நாட்டு படகுகளுக்கு மாதம் 300 லிட்டர் மண்ணெண்னை கிடைக்கப்பெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களின் தேவையை கருத்தில் கொண்டு; திட்டங்களை தீட்டி விரைவாக செயல்படுத்தி வருகிறார்கள். இன்று கூடுதாழையில் ரூ.15 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாகவும், கூடுதாழை பகுதி மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
![](http://media.tutyonline.net/assets/2025_Part_01/kooduthalai.jpg)
கூடுதாழையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மீன்பிடி துறைமுக திட்ட உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம், கூடுதாழை பங்குதந்தை பெண்சிகர் அமல், மீன்வளம் -மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் அருணா டென்சிங், திசையன்வினை வட்டாட்சியர் நாராயணன், குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/seemansk4_1739790558.jpg)
நிதி தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:38:43 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tvlmakkal43i_1739790282.jpg)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/protest4i34i_1739786507.jpg)
பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/duraimuruganwhit_1537266670_1739776557.jpg)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி
திங்கள் 17, பிப்ரவரி 2025 12:46:21 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tneb_1_1739775598.jpg)
வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!
திங்கள் 17, பிப்ரவரி 2025 12:30:36 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/edapadi43i43i_1739771396.jpg)
தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கைதான்: அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:19:13 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/dogattack_1739771561.jpg)