» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

தூத்துக்குடியில் நண்பர்களிடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில், கார் டிரைவரை வாயில் கத்தியால் குத்திய இருவரைப் போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (40). இவர் கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். சக்தி நகரைச் சேர்ந்த சரவணன் (40), பிரையண்ட் நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (33). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று இரவு பிரையண்ட் நகர் 7-வது தெருவில் உள்ள வெட்டவெளியில் அமர்ந்து மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், முத்துக்குமார் தனது நண்பர்களான சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சரவணனும் ஜெயப்பிரகாஷும் சேர்ந்து முத்துக்குமாரைச் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் அவரது நெஞ்சுப் பகுதி மற்றும் வாயில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மயங்கிச் சரிந்ததும், இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த முத்துக்குமாரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரையும் கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory