» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு காட்டும் தவெக அரசைக் கண்டித்தும், தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது: "தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு பயிர் கடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடனும் ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது நடைபெற்ற வேளாண் பட்ஜெட்டில் வெறும் ரூ.75,000 மட்டுமே தள்ளுபடி செய்து விவசாயிகளைத் தவெக அரசு வஞ்சித்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதைத் தடுக்கத் தவறி, தமிழகத்தின் காவிரி உரிமையைப் பெற முடியாமல் முதல்வர் விஜய் பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் மூலம் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளைப் பாதுகாக்காமல், சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற பெயரில் நாடகம் நடத்துகின்றனர்.
அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் வாக்களித்தபடி அனைத்து குடும்பங்களின் வங்கி கணக்கிலும் ₹10,000 மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 கிடைத்திருக்கும்” எனக் குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிங்காரம்: "முதலமைச்சர் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்கிறார். ஆனால் மக்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளுக்காக அதிமுக என்றும் களத்தில் போராடும்.
மாவட்டத்தில் 20-25 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, தற்போது கட்சியைக் குழப்பி துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகத்தில் குழப்பத்தை விளைவித்து வரும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன் ஆகிய 4 பேரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைஃபடும்” எனத் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்.கே.பெருமாள், மோகன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்டப் பொருளாளர் சேவியர் உட்படத் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக்கழக, சார்பு அணி, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)

பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:30:39 PM (IST)









