» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் மீது எஸ்பி அலுவலகத்தில் பொய்ப் புகாரளித்ததாக பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தவெக மகளிரணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜாமணியபுரத்தைச் சேர்ந்தவர் ரோகிணி. தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவரது செல்போனை, கடந்த ஜூன் 26-ஆம் தேதி தவெக உறுப்பினர் கூலிப்படையை ஏவிப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனக்குப் பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வரும் மணவை ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலாளர் பிரைட்டர், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன், மணப்பாடு அமலன், தூத்துக்குடி பிளஸ்சி, திருச்செந்தூர் ஆட்டோ குட்டிஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரோகிணி நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

தவெக மகளிரணி எதிர்ப்புகார்:

இதனிடையே, பொய் புகார் அளித்ததாக ரோகிணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தவெக மகளிரணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தவெக மாவட்ட இளம்பெண்கள் அணி இணைச்செயலாளர் கீதா தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி, மகளிரணி நகரச் செயலாளர் வேலவ செல்வி உள்ளிட்ட 10 பெண்கள் நேற்று இரவு எஸ்ஜை இருதயராஜிடம் புகார் மனுவை அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டர் மற்றும் ஆறுமுகநேரி நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன் ஆகியோர் மீது உண்மைக்குப் புறம்பான புகார் அளித்த ரோகிணி, தனது சொந்த தனிப்பட்ட பிரச்சினையைத் திசைதிருப்பி சமூகத்திலும், அரசியல் வட்டாரத்திலும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் குற்றச்சாட்டுகளைக் காவல்துறையிடம் அளித்துள்ளார்.

அவரது புகாரில் கூறியுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் பொய்யானவை. எவ்வித ஆதாரமும் இல்லை. ரோகிணி அளித்த புகாரினைப் போலீசார் முறையாக விசாரணை செய்து, அவர் அளித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரியவரும் பட்சத்தில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்."

மனு அளிக்கும் போது ஆறுமுகநேரி நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் உட்பட மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டு வந்திருந்தனர். இச்சம்பவம் கடந்த 2 நாட்களாகத் தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory