» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:30:39 PM (IST)

TreeSrinath.jpg

தூத்துக்குடி மாநகராட்சி உரக்கிடங்கு வளாகத்தில் 5,000 மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5,000 மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா முன்னிலை வகித்தார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "2019 முதல் 2026 வரை தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் 206 ஏக்கர் பரப்பளவில் 1,87,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலப் பகுதிகளில் இதுவரை 32,373 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 2,20,173 மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். "மரம் நடுவோம், வளம் பெறுவோம்” என்று அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முனிரஹமது, உதவிப் பொறியாளர்கள் ராஜேஷ்கண்ணன், காந்திமதி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory