» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை : இந்து முன்னணி முடிவு!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:28:36 AM (IST)

தூத்துக்குடியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்று இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி எழுச்சித் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா வழிகாட்டுதலின்படி, கோட்டச் செயலாளர் பிரம்ம நாயகம் தலைமையில் சுப்பையா முதலியார் புரம் 1-வது தெருவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்த ஆண்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து கோலாகலமாகக் கொண்டாட ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

இதில், மாவட்ட துணைத் தலைவர் ஆதிநாதன் ஆழ்வார், மாவட்டச் செயலாளர் சரவணகுமார். செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், கவின், சண்முகம், பழனியாண்டி, முத்துகிருஷ்ணன், மண்டலத் தலைவர்கள் பாலமுருகன், சதீஷ், பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory