» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுவில் பெயிண்ட் கலந்து குடித்த இளைஞர் பலி!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:14:27 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மதுவில் பெயிண்ட்டைக் கலந்து குடித்த வாலிபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகர் மகன் மணிகண்டன் (32). இவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அதிக மதுபோதையில் இருந்த அவர், வீட்டில் வைய்த்துத் தான் குடித்த மதுவில் பெயிண்ட்டைக் கலந்து குடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாகச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)









