» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்து: வாலிபர் உயிரிழப்பு

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:05:05 AM (IST)

தூத்துக்குடியில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி எஸ்.எம். புரம் 1-வது தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பழனிச்சாமி (26). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 12-ஆம் தேதி பழனிச்சாமி தனது பைக்கில் எஸ்.எம். புரம் 2-வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவருக்குத் தலையில் மிக பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அவரை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமி, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory