» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரிசார்ட் கட்டுமானப் பணியில் விபத்து : ஏணியிலிருந்து விழுந்து பீகார் வாலிபர் பலி!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 10:50:14 AM (IST)
தூத்துக்குடியில் ரிசார்ட் கட்டுமானப் பணியின் போது, ஏணியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் துறைமுகம் சார்பில் நியூ ஹார்பர் பகுதி கேம்ப்-1 எதிர்புறம் உள்ள கடற்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் கொற்கை ரிசார்ட்டில் பீகார் மாநிலம் அரியாரியா மாவட்டம் பெல்வா பகுதியைச் சேர்ந்த தபாரக் மமகன் சாஹெப் ராஜா (26), என்பவர் ஏசி டக்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு மேலிருந்து ஏணி வழியாகக் கீழே இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த தொழிலாளியை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தெர்மல் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)









