» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்கிரமிப்பாளர்களுக்குச் செக்! அரசுப் பள்ளி நிலம் அரசுக்கே சொந்தம் – ஆர்.டி.ஓ., அதிரடி உத்தரவு!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 10:32:51 AM (IST)

KayalSchool.jpg

காயல்பட்டினத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வரும் நிலம் முழுவதும் அரசுக்கே சொந்தமானது என்றும், அங்குத் தனிநபர்களின் அனுபவம் சட்டவிரோத ஆக்கிரமிப்பாகவே கருதப்படும் என்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா. கௌதம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் தென்பாகம் புல எண் 682/19-இல் உள்ள இந்நிலத்தில் 1934-ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. அரசு நிலத்தில் 'பாத்திமா நர்சரி பள்ளி' என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் தரப்பினர், கடந்த 2013-இல் அரசுப் பள்ளிக் கோப்புகளை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேருக்குத் நீதிமன்றம் 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

இந்நிலம் தனது குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறி நூருல் அமீன் என்பவர் பட்டா மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய திருச்செந்தூர் கோட்டாட்சியர் முற்றிலும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

அரசுப் பள்ளி நிலத்தை மீட்கும் வகையிலும், தனியார் பள்ளியின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பிற்குச் செக் வைக்கும் வகையிலும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு, காயல்பட்டினம் பொதுமக்களிடையேயும் கல்வி ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory