» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் ஆக. 18-ல் பொது ஏலம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:54:43 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் பொது ஏலத்தில் விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏலத்திற்கு உரிய வாகனங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்புறம் உள்ள கவாத்து மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாஹனங்களை நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
ஏலம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கவாத்து மைதானத்தில் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் (ஆக. 18) காலை 8 மணிக்குள் ரூ. 1,000 முன்பணமாகச் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
பணம் செலுத்துதல்: வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், அதற்குரிய ஏலத் தொகை மற்றும் சரக்கு-சேவை வரியை (GST) முழுமையாகச் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 94981-22425 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)









