» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரயிலில் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகள் மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:46:43 PM (IST)

இரயிலில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 6.5 சவரன் தங்க நகைகளை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல்துறையினர், கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி மாரிஸ்வரி. இவர் தற்போது சென்னை முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். கடந்த நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4:50 மணிக்குக் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்த தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு இரயிலில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பயணித்துள்ளார்.
அப்போது, அவசிய அவசரத்தில் மற்றொரு பயணி வைத்திருந்த அதே போன்ற கருப்பு நிற டிராவல் பையைத் தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அது தனது பை இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக ஆனந்தகுமார் அந்தப் பையைக் கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. பையினுள் 2 நெக்லஸ், 1 ஜோடி ஜிமிக்கி கம்மல், 1 ஜோடி காது மாட்டால் ஆகியவை இருந்தன. மேலும், அதில் சரவணா எலைட் ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் ரசீதும் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு, நகையின் உரிமையாளர் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதைக் கண்டறிந்து அவருக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினரின் தகவலின் பேரில் இன்று (09.08.2026) தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் வந்த மாரிஸ்வரி, உரிய அத்தாட்சிகளைக் காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, சுமார் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உரிய நேரத்தில் நகைகளைக் கண்டறிந்து ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை காவல்துறையினருக்குப் பயணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)









