» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அப்துல் கலாம் நினைவு தினம் : 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் அன்னதானம்!

திங்கள் 27, ஜூலை 2026 5:20:21 PM (IST)



முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-ஆவது வார்டு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்கள் ஆர். காசிலிங்கம், எஸ். சுரேஷ்குமார், தங்க முருகேசன், வேல்சாமி, எஸ்.பி. மணி, குமார், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory