» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சிதம்பரனாரை தரம் தாழ்த்தி சித்தரித்ததாக சர்ச்சை : சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 3:18:52 PM (IST)
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம்பிள்ளையை தரக்குறைவாகச் சித்தரித்து நிகழ்ச்சி தயாரித்த சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய வ.உ. சிதம்பரம் பிள்ளையை அவமதிக்கும் வகையில் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் சித்தரித்துள்ளதாக தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், வரலாற்றுத் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெருமையைக் குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்பட்ட சன் குழுமத்திற்கும், அதன் ஆதித்யா டிவி தொலைக்காட்சிக்கும் வன்மையான கண்டனத்தைப் பதிவிட்டுள்ளனர்.
சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த தியாகிகளைத் தரக்குறைவாகச் சித்தரிப்பதைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அப்துல் கலாம் நினைவு தினம் : 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் அன்னதானம்!
திங்கள் 27, ஜூலை 2026 5:20:21 PM (IST)

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!
திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)








