» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)

TasmacPetitionSankarp.jpg

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி சங்கரபேரி, மார்ட்டினா நகர் மற்றும் ஜி.பி. காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எங்கள் பகுதிக்குள் புதிதாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் 'ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி' அமைந்துள்ளது. 

மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், முதியோர் இல்லம், கோவில், பொதுப் பூங்காக்கள் மற்றும் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மதுபானக் கடை அமைப்பது பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, மார்ட்டினா நகர் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory