» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு

திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

tutyspsivaprasath.jpg

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட சிவபிரசாத்,  இன்று காலை காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory