» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!

திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

தூத்துக்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் உப்பளத் தொழிலாளி ஒருவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (40). உப்பளத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருண்ராஜ் சென்றுள்ளார். அங்கு முத்தையாபுரம் ஐயன்கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுந்தர் நகரில் காலியாகக் கிடந்த கார்த்திக்கின் மற்றொரு வீட்டிற்கு இருவரும் சென்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், அருண்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை செய்த பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டுத் தனது சொந்த வீட்டிற்குச் சென்ற கார்த்திக், இன்று காலை 11 மணியளவில் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று நேரடியாகச் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சுந்தர் நகருக்குச் சென்று அருண்ராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம், இக்கொலை மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory