» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!

திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

gdpCollector43i43.jpg

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல், மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய 516 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் அவர்களிடம் இருந்து 23 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் நேரில் சந்தித்துப் பெற்ற 47 மனுக்களும் என மொத்தம் 586 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கூட்டத்தின் ஒரு பகுதியாக 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்குத் தலா ரூ.15,250 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை (ரூ.30,500 மொத்த மதிப்பில்) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ரமணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory