» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாம் குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென பேருந்து நிலையம் அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், திருமுருகன் தலைமையிலான போலீசார், மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பழைய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
Muthu RajJul 23, 2026 - 07:48:03 PM | Posted IP 104.2*****
Yes, not in fill Even knowledge has its place
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!
திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

வ.உ.சிதம்பரனாரை தரம் தாழ்த்தி சித்தரித்ததாக சர்ச்சை : சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 3:18:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)









ஒருவன்Jul 24, 2026 - 10:17:45 AM | Posted IP 104.2*****