» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

KanjarrestAi.jpg

ஆறுமுகநேரி காவல் நிலைய கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (23) ஆகிய இருவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருந்தது. பொதுமக்களுக்கு இடையூறாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory