» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி!
புதன் 22, ஜூலை 2026 8:17:10 PM (IST)
காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர்' பெயர் சூட்டிய முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு நெல்லை தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” எனப் பெயர் சூட்டி, அத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்துள்ள தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய்க்கு, திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒருநாள் மாடு மேய்க்கும் குழந்தைகளிடம் 'ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?' எனக் கேட்டபோது, 'பள்ளிக்குச் சென்றால் சாப்பாடு யார் தருவார்கள்?' என்று அக்குழந்தைகள் கேள்வி எழுப்பினர்.
உடனே உணவுத்துறை அமைச்சரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய காமராஜர், 'அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு உண்டி (சத்துணவு) வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்; அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்' என்று கூறி, தனது ஆட்சிக்காலத்தில் முதன்முதலாகப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிக்கு வராத குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். அதுவே இன்றுவரை மதிய உணவுத் திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது." முந்தைய ஆட்சிக் காலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகக் ‘காலை உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டது.
தற்போது பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்கள், இத்திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயர் மாற்றம் செய்துள்ளதோடு, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கத்தின் சார்பில் கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!
திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

வ.உ.சிதம்பரனாரை தரம் தாழ்த்தி சித்தரித்ததாக சர்ச்சை : சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 3:18:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)








