» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை: மனைவி கோரிக்கை!

திங்கள் 20, ஜூலை 2026 3:26:18 PM (IST)

Petiton43i34i.jpg

தூத்துக்குடியில் தனது கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தீரேஸ் நகரைச் சேர்ந்த சங்கரேசன் மனைவி சுகந்தி (39) என்பவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு அளித்தார். அந்த மனுவில்,  கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை தனது கணவர் சங்கர சேகரன் (43), மாதா நகர் அருகே மர்ம நபர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட சங்கர சேகரன் தாழ்த்தப்பட்டோர் பட்டியலைச் சேர்ந்தவர். ஆனால், இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எஸ்சி அல்லாத இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் போட்டி, சாதி வன்முறை மற்றும் சாதி அடிப்படையிலான வெறுப்புணர்வு ஆகியவை கலந்து இக்கொடூரக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு உட்பட்டது என்பதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆருடன் கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிஓஏ சட்டப் பிரிவுகளின் கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கணவரின் திடீர் மறைவு தங்களது குடும்பத்தைப் பொருளாதாரம் மற்றும் மனநல ரீதியாக முற்றிலும் பாதித்துள்ளதாகவும், தங்களது குடும்பத்திற்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும், வழக்கின் முன்னேற்ற அறிக்கையை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மனுவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory