» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு: 5 மாணவர்கள் மீட்பு – 2பேரை தேடும் பணி தீவிரம்!

ஞாயிறு 26, ஜூலை 2026 7:49:22 PM (IST)

தூத்துக்குடி அருகே கடலில் படகு கட்டுப்பாட்டை இழந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் 5 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய 2 மாணவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் உள்ள பழைய ஏழகூடம் பகுதியிலிருந்து, அந்தோணி என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் 7 மாணவர்கள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர். கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கடலில் குளிப்பதற்காகப் படகை எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது பிற்பகல் 3.30 மணியளவில் பலத்த காற்று வீசியதால், பைபர் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. படகு கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பதற்றமடைந்த மாணவர்களில் பெரியராஜா, ரஸ்வின், மனோஜ்குமார் மற்றும் ஜோஸ்வா ஆகிய 4 பேர் கடலில் குதித்துள்ளனர். சாலமன் நிதிஷ், வின்சென்ட் மற்றும் ரைனர் ஆகிய 3 மாணவர்கள் படகிலேயே இருந்துள்ளனர்.

உடனடியாகச் சாலமன் நிதிஷ் தனது தந்தை சாக்ரடீஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த சாக்ரடீஸ், உடனடியாக மற்றொரு பைபர் படகை எடுத்துக்கொண்டு ஆழ்கடலுக்குச் சென்று படகில் இருந்த 3 மாணவர்களையும் பத்திரமாக மீட்டார். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கடலில் தவித்த பெரியராஜா மற்றும் ரஸ்வின் ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டுப் படகில் ஏற்றினர்.

எனினும், கடலில் மூழ்கிய மனோஜ்குமார் மற்றும் ஜோஸ்வா ஆகிய இருவரையும் காணவில்லை. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான இரு மாணவர்களையும் மீட்கும் பணியில் மரைன் காவல்துறையினரும் உள்ளூர் மீனவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory