» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 26, ஜூலை 2026 7:42:41 PM (IST)

Hindumunni43i34.jpg

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கான தரிசனக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெரு முதன்மைச் சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தரிசனக் கட்டண முறையை அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இந்து சமய அறநிலையத் துறை கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை முழுமையாக இந்து கோவில்களின் திருப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தைப் போலிப் பத்திரம் மூலம் ஆக்கிரமித்த குற்றவாளிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கோவில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் மாயவன் முத்துச்சாமி, மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், ஆர்.எஸ்.எஸ் ஜில்லா சங்கச்சாலக் சீதாராமன், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன், இந்து அன்னையர் முன்னணி மாநகரத் தலைவி உமையவள்ளி, மத்திய அரசு வழக்கறிஞர் இசக்கி லெட்சுமி ஆகியோர் பங்கேற்றனர் மற்றும் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory