» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு

ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)



தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிக இயக்கம் சார்பில் இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க "இயற்கையே இறை" என்ற‌ பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் உலகம் முழுவதும் ஜும் இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் "இயற்கையே இறை!" என்ற திறந்த‌வெளி உலக மகா வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூரில் ஆன்மிக இயக்க‌ துணைத்தலைவர் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், குருபீடங்களில் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் ஆன்மிக இயக்கம் சார்பில் "இயற்கையே இறை" என்ற பஞ்ச தெய்வ சிறப்பு வழிபாடு எப்.சி.ஐ.குடோன் எதிரில் திறந்த வெளியில் நடைபெற்றது. காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் தணிந்து மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு இயற்கையே இறை பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது.

ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளிய அருள்வாக்கின்படி நடைபெற்ற இந்த இயற்கை வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் அகல் விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.வ‌ழிபாட்டில் மூலமந்திரம், 108 குரு போற்றி, 108 அம்மா போற்றி, பஞ்ச தெய்வ வழிபாடு, மழைவேண்டல் உள்ளிட்ட இயற்கை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், தூத்துக்குடி கடற்கரையில் இயற்கை சீற்றம் தணிய தியானம் மேற்கொள்ளப்பட்டது.



இதே போன்று கோவில்பட்டி, எட்டையாபுரம் ஆகிய இடங்களில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பிலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், மகளிர் அணி பத்மா, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, எட்டையாபுரம் மன்ற தலைவி சிவகாமி, புதிய துறைமுகம் கண்ணகி, பாண்டி, புதுக்கோட்டை பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory