» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பலி; மற்றொருவர் படுகாயம்!
சனி 18, ஜூலை 2026 10:29:05 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் முத்தமிழரசன் (18). அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவரது மகன் மாரிக்கண்ணன் (18). இவர்கள் இருவரும் தூத்துக்குடிதூத்துக்குடி துறைமுகம் பகுதியில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இன்று காலை பணிக்குச் செல்வதற்காக முத்தமிழரசன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மாரிக்கண்ணன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முத்தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிக்கண்ணன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முத்தமிழரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணியில் 60 மீனவர்கள் : கடற்கரையில் திரண்ட மக்கள்!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:45:00 PM (IST)

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு: 5 மாணவர்கள் மீட்பு – 2பேரை தேடும் பணி தீவிரம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:49:22 PM (IST)

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:42:41 PM (IST)

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு
ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)








