» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஏ.டி.எம்: மேயர் திறந்து வைத்தார்!

வியாழன் 16, ஜூலை 2026 11:47:09 AM (IST)

TMBATMBUstand.jpg

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய ஏ.டி.எம். மையத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். 

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிய ஏ.டி.எம். திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் எம். டி. வின்சென்ட் தலைமை தாங்கினார். நிர்வாகத் துணைத் தலைவர் ஆனந்த கணேசன் முன்னிலை வகிக்க, தூத்துக்குடி மண்டல மேலாளர் தரணிதரன் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி புதிய ஏ.டி.எம். மையத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளர்கள் இளங்கோவன், சேர்மன் கவாஸ்கர், நீதிராஜன், பாலாஜி குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, வட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

அருமைJul 19, 2026 - 03:18:59 PM | Posted IP 104.2*****

அருமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory