» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

ஆறுமுகநேரி அருகே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மனவிரக்தியடைந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உச்சி மாகாளி மகன் லட்சுமண ராஜா (20). இஅதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், லட்சுமண ராஜா கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்த சூழலில், லட்சுமண ராஜா மது அருந்திவிட்டு அந்தத் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனை அவரது தந்தை உச்சிமாகாளி அங்கேயே வைத்துக் கண்டித்துள்ளார். இதனால் கடும் மனவிரக்தியடைந்த லட்சுமண ராஜா வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், தனது நண்பரான மாதவன் என்பவருக்குத் தொலைபேசி மூலம் விபரத்தைக் கூறிவிட்டு, வீட்டின் கூரையில் சேலையால் தூக்கு மாட்டிக்கொண்டார். தகவலறிந்து பதறியடித்தபடி வீட்டிற்கு விரைந்து வந்த நண்பர் மாதவன் மற்றும் உறவினர்கள், லட்சுமண ராஜாவை மீட்டு ஆட்டோ மூலம் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், லட்சுமண ராஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory