» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் சாந்தினி தலைமை தாங்கினார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி கலந்துகொண்டு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு, சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள், அவசரகால உதவிகளைப் பெறும் நடைமுறைகள் விழிப்புணர்வு வழங்கி, காவல்துறை அவசர உதவி எண் 1091 பயன்பாட்டை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ரங்கநாதன், பெண்களின் சட்ட உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், இலவச சட்ட உதவிகளைப் பெறும் வழிமுறைகள் விளக்கிப் பேசினார். மாவட்ட மகளிர் அதிகார மைய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா, குழந்தைத் திருமணத் தடுப்பு, பாலின சமத்துவம், கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தடுப்பு, கைப்பேசிப் பயன்பாடு, அரசின் மகளிர் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மகளிர் உதவி எண் 181 பயன்பாட்டை விளக்கினார்.
நிகழ்ச்சியில், குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அனைத்து மாணவிகளும் "குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி" ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்" என்ற தலைப்பில் சுவரொட்டி (Poster) மற்றும் மௌன நாடகம் (Mime) போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள், ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' வார்த்தை நீக்கம்: இனி வெறும் 'மகளிர் பயணம்' மட்டுமே!
வியாழன் 9, ஜூலை 2026 3:59:16 PM (IST)








