» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாநகராட்சியில் துவக்கம்!
வியாழன் 9, ஜூலை 2026 12:52:59 PM (IST)

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்டக் களப்பணி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று துவங்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலப் பகுதிகளிலும் இப்பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 09.07.2026 முதல் 11.07.2026 வரை முதற்கட்டமாகவும், 13.07.2026 முதல் 15.07.2026 வரை இரண்டாம் கட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியில் ஈடுபட உள்ள 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் களப்பணி பயிற்றுநர்களால் முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் வ.உ.சி கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று துவங்கப்பட்டுள்ளன என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

பத்திரிகையாளர்களை அடிக்கப் பாய்ந்த ஏடிஎஸ்பி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திங்கள் 20, ஜூலை 2026 9:56:33 PM (IST)

கோவில்பட்டி "இது எங்கள் பூமி" விவசாய கதை ஆசிரியர் கோ. சுரேஷ்குமாருக்கு பாராட்டு விழா!
திங்கள் 20, ஜூலை 2026 9:54:37 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)








