» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)

விளாத்திகுளம் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேளாண், உழவர்நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்திற்குட்பட்ட கமலாபுரம் ஊராட்சியில் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிட்டங்கியுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம், பயறு மதிப்பு கூட்டுதல் முறை, 1000 கிலோ உலர் திறன் மேம்படுத்தப்பட்ட சூரிய உலர்த்தி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கான அடையாள அட்டை பதிவேற்றம், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வேளாண் வட்டார உதவி இயக்குநர் அலுவலக நடைமுறைகள், இடுப்பொருட்கள் விற்பனை மையத்தில் உரம், உளுந்து விதைகளின் இருப்பு, மிளகாய் பதப்படுத்தும் பணி மற்றும் கீழவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயி பண்ணைக்குட்டை ஆகிய பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
விளாத்திகுளம் பேரூராட்சி மற்றும் ஆர்த்தி மஹாலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 தொடர்பாகக் களப்பணியாளர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, எடை, உயரம் மற்றும் வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார்.
வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஹெச்சிஎல் தொண்டு நிறுவன உதவியுடன் இயங்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தையல், ஆடையகம் அலகைப் பார்வையிட்ட ஆட்சியர், தாமரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2.80 லட்சம் வங்கிக் கடனுதவியினை வழங்கினார். தொடர்ந்து கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூடை பின்னுதல் தொழில், பூசனூர் ஊராட்சியில் ஹெச்சிஎல் தொண்டு நிறுவன உதவியுடன் 15 விவசாயிகளுக்குக் கறவை மாடுகள் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ரூ.50 லட்சம் கண்மாய் கால்வாய் பணி:
வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்திரவாத திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கீழ்பாடி கண்மாய்க்கு வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பணிகளைத் தரமாகவும் விரைந்தும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோ ரஞ்சிதம், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

பத்திரிகையாளர்களை அடிக்கப் பாய்ந்த ஏடிஎஸ்பி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திங்கள் 20, ஜூலை 2026 9:56:33 PM (IST)

கோவில்பட்டி "இது எங்கள் பூமி" விவசாய கதை ஆசிரியர் கோ. சுரேஷ்குமாருக்கு பாராட்டு விழா!
திங்கள் 20, ஜூலை 2026 9:54:37 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)








