» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, விக்ரம் சோலார் நிறுவனம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தனது அதிநவீன மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2,670 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)








