» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
வியாழன் 9, ஜூலை 2026 12:48:05 PM (IST)

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளித் தாளாளரும் செயலாளருமான எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் வழிகாட்டுதலின்படி தி ஐ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இலவசக் கண் சிகிச்சை முகாமை தட்சண மாற நாடார் சங்க இயக்குநரும் பள்ளி நலக்குழு உறுப்பினருமான கே. லிங்கச்செல்வன், கே.ஏ.பி. சீனிவாசன், கே .கே. ஆர்.ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட மொத்தம் 684 பேர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அடுத்தகட்டமாகத் தேவையான இலவசத் தொடர் சிகிச்சைகளுக்கான முழு ஏற்பாடுகளும் பவுண்டேஷன் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








