» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் ஜூலை 26ல் போதை ஒழிப்பு மாநாடு: அண்ணாமலை பங்கேற்பு

செவ்வாய் 7, ஜூலை 2026 5:01:52 PM (IST)

திருச்செந்தூரில் வருகிற 26ஆம் தேதி "We The Leaders" அமைப்பின் சார்பாக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை முன்னிறுத்தி, "போதை அரக்கனை வென்று கொள்ள!" என்ற முழக்கத்துடன் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு அண்ணாமலை முதன்மை அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.

இம்மாநாடு வரும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:00 மணிக்குத் திருச்செந்தூர் - திருநெல்வேலி மெயின் ரோடு, ஷபி டிரேடர்ஸ் எதிரே உள்ள மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளை "We The Leaders" அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

Vasunanthanan RamaswamyJul 8, 2026 - 09:10:00 PM | Posted IP 162.1*****

Sir I appreciate your vision and mission is good for improve health wealth and happiness of families of middle class. They spend their money for little pleasure, that spoils whole society in many ways

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory