» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

தூத்துக்குடி 18-ஆவது வார்டுக்குட்பட்ட நிகிலேசன்நகர் மெயின் ரோடு பகுதியில் பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலைச் சீரமைக்கவும், விடுபட்ட பகுதிக்குத் தார்ச் சாலை அமைக்கவும் வலியுறுத்திப் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி அலுவலகத்தில் காந்திநகர் நலச்சங்கத் தலைவர் ஆனந்தசேகர், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் அகஸ்டின், கவுன்சிலர் ஜான் மற்றும் வினோத் ஆகியோர் இந்த மனுவை மேயரிடம் நேரில் வழங்கினர்.அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மழைநீர் வடிகால் வாய்க்கால் பிரச்சினைதூத்துக்குடி மாநகராட்சி 18-ஆவது வார்டு நிகிலேசன்நகர் மெயின் ரோடு காந்திநகர் பூங்கா முதல் பக்கிள் ஓடை வரை கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் சரிவர அமைக்கப்படவில்லை.
இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை பக்கிள் ஓடையில் கலப்பதற்கு முன்னரே, நிகிலேசன்நகர் 3-ஆவது மெயின் தெருவில் நிரம்பி வெளியேறிச் சாலையில் தேங்கி நிற்கிறது.இதற்குக் காரணம், அப்பகுதியில் உள்ள நிகிலேசன் வீட்டிற்கு எதிர்புறம் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் சுமார் ஒன்றரை அடி வரை உயரமாகக் கட்டப்பட்டுள்ளதுதான்.
நிகிலேசன்நகர் 2-ஆவது மெயின் தெரு மேற்குப் பகுதியில் உள்ள இந்த அடைப்பை உடைத்துச் சரிசெய்தால் மட்டுமே வடக்கிலிருந்து வரும் தண்ணீர் தெற்கு நோக்கிச் சீராகச் செல்லும். எனவே, வரவிருக்கும் மழைக்காலத்திற்கு முன்பாக இந்த வடிகால் வாய்க்காலை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுபட்ட பகுதிக்குத் தார்ச் சாலை அமைக்கக் கோரிக்கைமேலும், இப்பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்து, தற்போது புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், நிகிலேசன்நகர் 2-ஆவது மெயின் தெருத் தொடர்ச்சியின் ஒரு பகுதி மட்டும் சாலை அமைக்கும் பணியில் விடுபட்டுள்ளது.எனவே, விடுபட்ட அந்தத் தெருப் பகுதிக்கும் சேர்த்துப் புதிய தார்ச் சாலை அமைத்துத் தர மாநகராட்சி நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் நிகிலேசன்நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, இப்பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









