» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு

சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,    இன்று (13.06.2026), சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், புத்தன்தருவை ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தன்மை குறித்தும். தொடர்ந்து, புத்தன்தருவை ஊராட்சி நியாய விலைக் கடையினை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டார். 

பின்னர், புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினையும், அங்குள்ள உரக் கிட்டங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள உரங்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புத்தன்தருவை ஊராட்சியில் பொதுபணித்துறை (நீர்வளத்துறை) கட்டுப்பாட்டில் உள்ள தருவை குளத்தினை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் உள்ள பொது நூலகத்தினை பார்வையிட்டார். மேலும், கொம்மடிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு, கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். படுக்கப்பத்து அரசு கால்நடை மருந்தகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்,   அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான்,  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) சந்திரசேகர்,  சாந்தி,செயற்பொறியாளர், நீ.வ.து., கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பாலமுருகன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory