» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)
கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள அழகு நாச்சியார்புரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சதீஷ்குமார் (33). இவர் தனது தம்பி சுபாஷ் (20) என்பவருடன் தனது ஹீரோ பிளஷர் இருசக்கர வாகனத்தில் திருவேங்கடத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், சாத்தூரிலிருந்து விளாத்திகுளம் நோக்கி ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் (34) மற்றும் சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த ஜெகஜோதி (36) ஆகிய இருவரும் வந்துகொண்டிருந்தனர். கோவில்பட்டி - சாத்தூர் மாநில நெடுஞ்சாலையில் ஏஎன்ஏ நகர் அருகே இரு வாகனங்களும் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார், தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த தம்பி சுபாஷுக்கு இடது கால் எலும்பு முறிந்தது. மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த சந்தனகுமார், பின்னால் அமர்ந்திருந்த ஜெகஜோதி என்ற பெண்ணுக்கு முகம் மற்றும் வாய் பகுதியில் பலத்த ரத்தக்காயங்களும் ஏற்பட்டன.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலைக் கைப்பற்றிக் கோவில்பட்டி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த சுபாஷ், சந்தனகுமார் மற்றும் ஜெகஜோதி ஆகிய மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)









