» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!

சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)



தூத்துக்குடி அருகே வாகைகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பி ஆகிய இருவரைப் போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகர் (23) மற்றும் ராஜா (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுதாகர் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory