» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் உள்ள 10 வார்டுகளுக்கு இன்னும் சில தினங்களில் 24 மணி நேரமும் தொடர் குடிநீர் விநியோகம் செய்யும் பணி துவக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
வல்லநாடு அகரம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வரும் 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்ட உறைக்கிணறு மற்றும் நீரேற்று நிலையப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களுக்குக் கோடைகாலத்திலும் தங்கு தடையின்றிக் குடிநீர் வழங்கும் நோக்கில், வல்லநாடு அகரம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் எல். பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட 2-வது பைப்லைன் திட்டத்தின் குடிநீர் வெள்ளோட்டத்தையும் மேயர் துவக்கி வைத்தார்.
ஆய்வுக்குப் பின் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "நான் மேயராகப் பதவியேற்பதற்கு முன்பு தூத்துக்குடி மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வந்தனர். பதவியேற்ற பின்பு படிப்படியாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, தற்போது ஒரு சில பகுதிகளைத் தவிர மாநகரின் அனைத்து வார்டுகளிலும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகருக்குக் குடிநீர் கொண்டு வரும் 1, 2, 3, 4 ஆகிய நான்கு பைப்லைன்களும் முழு அளவில் இயங்கும்போது, மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதுவே எனது முதன்மை இலக்கு. தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் பெறும் வார்டுகளுக்கு விரைவில் தினசரி குடிநீர் வழங்கப்படும். முதற்கட்டமாக, மாநகரில் உள்ள 10 வார்டுகளுக்கு இன்னும் சில தினங்களில் 24 மணி நேரமும் தொடர் குடிநீர் விநியோகம் செய்யும் பணி துவக்கப்படும். அடுத்த சில மாதங்களில் அனைத்து வார்டுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்" என்றார்.
ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் திலகா, இளநிலைப் பொறியாளர் செல்வம், உதவிப் பொறியாளர் லெனின், குடிநீர் விநியோகக் கண்காணிப்பாளர்கள் ஆறுமுககுமார், பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், திமுக பகுதிச் செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் கனகராஜ், ஆணையரின் உதவியாளர் துரைமணி மற்றும் மேயரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)

தூத்துக்குடியில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
வியாழன் 28, மே 2026 3:30:52 PM (IST)










