» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)
சங்கரலிங்கபுரம் அருகே கோவில் திருவிழாவில், இன்னிசைக் கச்சேரி பார்த்துவிட்டு திரும்பி வந்த நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (45). இவர் சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற இரவு இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியைக் காண்பதற்காகச் சென்றிருந்தார். பின்னர் நள்ளிரவில் அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், குணசேகரன் சல்லிசெட்டிபட்டி ஊருக்கு வடக்கே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தப்படாமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றது.
அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)

தூத்துக்குடியில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
வியாழன் 28, மே 2026 3:30:52 PM (IST)










