» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகத்தில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் வி. பிரசன்னாவை நேரில் சந்தித்து, தூத்துக்குடி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
- தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை அல்லது திருச்சி அல்லது போடிநாயக்கனூருக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கப்படும் போது, தூத்துக்குடியிலிருந்து காலை 08:30 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரயிலை ரத்து செய்ய வேண்டும்.
- மேட்டுப்பாளையம் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்: வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர இருமுறை ரயிலைத் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். அவ்வாறு இயக்கப்படும் போது, தூத்துக்குடியிலிருந்து இரவு 10:45 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி ரயிலை ரத்து செய்யலாம்.
- வந்தே பாரத் ரயில் சேவை: தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும்.
- பாலக்காடு ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள் இணைத்தல்: வண்டி எண். 16791/16792 தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி விரைவு ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (2 Tier AC) ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
- முத்து நகர் அதிவிரைவு ரயிலில் கூடுதல் பெட்டி: வண்டி எண். 12693-12694 தூத்துக்குடி - சென்னை - தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி (Sleeper Class) அல்லது மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3 Tier AC) ஒன்றை நிரந்தரமாக இணைக்க வேண்டும்.
- மதுரை - சென்னை ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: வண்டி எண். 22623-22624 மதுரை - சென்னை வாரமிருமுறை ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனைக் தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு: வண்டி எண். 22101/22102 மதுரை - லோக்மான்ய திலக் (மும்பை) - மதுரை வாராந்திர விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
- மைசூர் ரயில் வருகை நேரம் மாற்றம்: வண்டி எண். 16236 மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில், தூத்துக்குடிக்குக் காலை 09:30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அதன் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- ல்லை - கன்னியாகுமரி ரயில் நீட்டிப்பு: வண்டி எண். 56707-56708 திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
இச்சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா. பிரமநாயகம், துணைத் தலைவர் எஸ். அந்தோணி முத்துராஜா நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என். ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகளின் தேவைகளை விவரித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கூடுதல் கோட்ட மேலாளர் வி. பிரசன்னா, கோரிக்கைகளை விரைவாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடியில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
வியாழன் 28, மே 2026 3:30:52 PM (IST)










