» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

நாலாட்டின்புதூர் அருகே மதுப் பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கண்டித்ததால் தூக்கில் தாெங்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (35). இவருக்கு சாந்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்குச் 9 வயதில் மகள் உள்ளார். கலைச்செல்வனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி சாந்தியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 6-ஆம் தேதி கலைச்செல்வன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வன், திடீரென வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்துத் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory