» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநர் கைது!
திங்கள் 11, மே 2026 8:34:03 AM (IST)
கோவில்பட்டியில் 12 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட லாரி ஓட்டுநரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர் என்பவரது மகன் கருப்பசாமி என்ற விக்னேஷ் (29). இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில்பட்டி பகுதியில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, விக்னேஷ் மீது போக்சி சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று விக்னேஷைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பெ. மதன்ராஜா தூத்துக்குடி வருகை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி வரவேற்பு!
வியாழன் 28, மே 2026 5:39:27 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வியாழன் 28, மே 2026 4:48:35 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி!
வியாழன் 28, மே 2026 4:23:36 PM (IST)

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 28, மே 2026 4:16:19 PM (IST)

சீமானின் மகளுக்கு சீர் கொண்டு சென்றது ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விளக்கம்!
வியாழன் 28, மே 2026 4:04:29 PM (IST)

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் உள்பட புதிய ரயில் சேவை : ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
வியாழன் 28, மே 2026 3:35:46 PM (IST)










