» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட நாசரேத் மர்காஷியல் கல்லூரி ஆகிய இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட ஆட்சியர், தேர்தல் இயந்திரங்களை இயக்குவது மற்றும் மாதிரி வாக்குப்பதிவு முறைகள் குறித்து வழங்கப்பட்ட பயிற்சிகளை ஆய்வு செய்தார்.
பயிற்சி வகுப்பில் ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது: மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll): மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கட்டுப்பாட்டு கருவியை (Control Unit) கட்டாயம் 'கிளியர்' (Clear) செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் வாக்கு எண்ணும் போது மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படும். இதற்கு அந்தந்த தலைமை அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
முகவர்களின் முக்கியத்துவம்: வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையிலேயே மாதிரி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அவர்களுக்குப் படிவம் 17C நகலை முறையாக வழங்க வேண்டும். செயலி பயன்பாடு: வாக்குப்பதிவு விவரங்களைப் பதிவேற்ற 'App' வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தரவிறக்கம் மற்றும் சந்தேகங்களை இன்றே சரிசெய்து கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று இதில் குழப்பம் ஏற்படக் கூடாது. 'High Risk Mistake' எனப்படும் மிக முக்கியமான தவறுகள் எக்காரணம் கொண்டும் நடக்கக்கூடாது. ஓராண்டு கால உழைப்பின் வெற்றி உங்கள் கைகளில்தான் உள்ளது.
பயிற்சி வகுப்பைத் தொடர்ந்து, திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட தைலாபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் சின்னமாடன்குடியிருப்பு தூ.நா.தி.அ.க நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆட்சியர் நேரில் சென்றார். அங்குத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காகப் பொருத்தப்பட்டு வரும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மற்றும் நேரலை (Web Casting) வசதிகளை அவர் ஆய்வு செய்தார்.
மேலும், தபால் வாக்குகள் பதிவு செய்யத் தயார் செய்யப்பட்டிருந்த மையத்தின் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)





