» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: நண்பர்கள் இருவர் கைது
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:26:04 AM (IST)
தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவரது நண்பர்கள் கொத்தனார் காலனியைச் சேர்ந்த கதிர்வேல் (24) மற்றும் பச்சைபெருமாள் என்ற அய்யனார் (21). கடந்த சில நாட்களுக்கு முன்பு, அய்யனார் தினேஷின் தங்கை குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தினேஷ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தினேஷ், கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய மூவரும் டி.சவேரியார்புரம் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தினேஷ் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)





