» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)
கழுகுமுறை அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்த குடோனில் போலீசார் சோதனை நடத்தி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமுறை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38). இவருக்குச் சொந்தமான பழைய தீப்பெட்டி ஆலைக்குச் சொந்தமான குடோன் ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்த குடோனில் சட்டத்திற்குப் புறம்பாகப் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகக் கழுகுமுறை தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், கழுகுமுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, எவ்வித அரசு அனுமதியுமின்றி அங்குப் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் வானவெடிகள் தயாரித்து விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குடோனில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சங்கிலிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ள நிலையில், அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)





