» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:22:29 AM (IST)
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சீனிவாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கூடுதல் பேருந்து நிலையம் எதிரே உள்ள புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பழைய அப்பனேரி பகுதியிலிருந்து நாலாட்டின்புதூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக சீனிவாசனின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சீனிவாசனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான காரைச் செலுத்தி வந்த அப்பனேரியைச் சேர்ந்த மாரிசாமி மகன் அஜித் பிரசன்னா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)





