» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவிருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை முன்னிட்டு, தூத்துக்குடியில் திமுக சார்பில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வின் போது, "தமிழக உரிமையைக் காப்போம்", "மத்திய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம்", "தேசிய ஜனநாயக கூட்டணியின் சதியை முறியடித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க" என்பன உள்ளிட்ட பல்வேறு வெற்றி முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநிலப் பேச்சாளர் சரத்பாலா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)






கந்தன்Apr 19, 2026 - 02:16:26 PM | Posted IP 104.2*****